வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வர்த்தக கிளை (கோப் சிற்ரி) 1ம் திகதி புதன்கிழமை அன்று வங்களாவடி சந்தியில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமை கட்டடத் தொகுதியில் யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையளர் கி.சந்திரசேகரன் அவர்களல் நாடாவெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் த.தர்மராஜேந்திரன் தலைமையில் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகள் பணியாளர்களது பிரசன்னத்துடன் குறித்த நிகழ்வு இன்று முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெற்றது.
நீண்டகாலமாக தேவையான பொருட்களை வேலணை நுகர்வோருக்கு குறைந்த விலையில் நம்பகத் தன்மையுடன் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்த நிலையில் தற்போது நவீன வசதிகளுடன் குறித்த வர்த்தக கிளை திறந்துவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
























