ஜேஆர்ஜி புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17ம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது. தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இந்த மையக்கருவை வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. வழக்கமான பாடல், ஃபைட், காமெடி என எந்த அம்சங்களும் இல்லாமல் முழுக்க வித்தியாசமான திரைக்கதையில், சுவாரஸ்யமான வகையில் 90 நிமிட கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பெங்களூரில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார். அபிநய் ஒரு எதிர்மறை பாத்திரத்தில் வில்லனாகக் கலக்கியுள்ளார். எஸ்தர், ஆத்விக் உடன் குழந்தை நட்சத்திரம் ஆத்விக் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜோ கோஸ்டா அருமையான பின்னணி இசையைத் தந்துள்ளார். சபரி மிகச்சிறப்பாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் சென்சார் செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் பெறப்பட்ட நிலையில், வரும் அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.
























