வெண்ணிலா கபடிகுழு, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், கட்டா குஸ்தி போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் விஷ்ணு விஷால். இவர் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன். இப்படத்தை அறிமுக இயக்குநரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. ஆர்யன் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 31ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் 25-வது பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஷ்ணு விஷாலின் 25-வது படத்தை லெவன் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜ்லீஸ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தை ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கிறது. திரையரங்குகளில் ஓரளவு வெற்றிப்படமான லெவன் ஓடிடி வெளியீட்டில் பெரிதாகக் கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
























