பாட்டருவியான அவரைப் பாராட்ட உலகெங்குமிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் நேரிலும் இணையத்திலும் இணையவுள்ளார்கள்
கனடா – மொன்றியால் மாநகரில் கடந்த பல வருடங்களாக வாழ்வது மாத்திரமல்ல தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் அவசியமானவை என்ற நிலைப்பாட்டோடு தொடர்ச்சியாக பயணித்து வரும் பாட்டருவி தமிழ்மாமணி கவிஞர் க. உயிரவன் . அவர்களின் மணிவிழாவை முன்னிட்டு 25-10- 2025 அன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மொன்றியால் மாநகரில் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் எடுக்கும் விழா நடைபெறவுள்ளது.
மேற்படி மணிவிழா நிகழ்விற்கு மொன்றியால் வாழ் வர்த்தகப் பிரமுகரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஏ. எம். இராஜபோல் அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றுள்ளார்.
பன்முக ஆற்றலுள்ள க. உயிரவன் . அவர்களைப் பாராட்டி மகிழ்வதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் பல அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களின் விருப்பத்தின் பேரில் இடம்பெறும் இவ்விழா சிறப்புற நடைபெற கனடா ரொறன்ரோ மாநகரிலிருந்து ‘கனடா உதயன்’ வெளியீட்டு நிறுவனம் மற்றும் ‘யுகம் வானொலி நிறுவனம் ஆகியவற்றின் அதிபர்கள் தமது குழுவினரோடு இணைந்து வாழ்த்துகின்றார்கள். அவரைப் பாராட்ட விரும்புவோர் 1514 867 1551 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.
























