மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் குவித்து வருகிறது. இதனிடையே, இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ‘பைசன்’ படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்னம், இப்போ தான் படம் பார்த்தேன் மாரி. படம் ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க தான் பைசன். உன் படைப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். இதை தொடர்ந்து செய். உன் குரல் தான் முக்கியம் என பாராட்டினார்.
























