ஜேர்மனியில் நடைபெற்ற இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாடும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவில் எழுச்சி உரையாற்றிய இயக்கத்தின் அகில செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம்
ஜேர்மனியிலிருந்து எமது செய்தியாளர் சுந்தரேசன்
“நீண்ட காலமாக எமது மண்ணில் இடம்பெற்ற போர் மற்றும் இன அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் அரச பயங்கரவாதம் ஆகியவை காரணமாக எமது தாய்மண்ணில் தமிழ் மக்களுடைய இருப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறான காலப்பகுதியில் அவர்களின் பாதுகாப்பிற்காகவும் இறையாண்மைக்காவும் குரல் கொடுக்கக் கூடிய ஒரே அமைப்பு ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்’ என்னும் உ ன்னத இயக்கமே ஆகும். எனவே 52 ஆண்டு கால பழைமையும் பெருமையும் மிக்க இந்த இயக்கத்தை கட்டிக்காக்கவும் எமது மக்களின் பண்பாடு.
தமிழ்க் கல்வி, உலகத் தமிழர்களின் ஒற்றுமை ஆகியவற்றையும் உறுதியுடன் பேணும் வகையில் எமது இயக்கத்தை மேலும் முன்னேற்றப் பாதையில் நகர்த்திச் செல்ல வேண்டும். அத்துடன் எமது புனிதமான இயக்கத்தின் பயணத்தில் சில பாதகமான செயற்பாடுகளை உலகின் சில நாடுகளில் மேற்கொள்ளும் ‘புல்லுருவிகளை” நாம் ஒன்றிணைந்து ‘முளையிலேயே’ கிள்ளி எறிய வேண்டும்”
இவ்வாறு ஜேர்மனி தேசத்தில் றெயின் நகரில் 25-10-2025 அன்று சனிக்கிழமை ;நடைபெற்ற இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாடும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவில் எழுச்சி உரையாற்றிய உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் முழக்கமிட்டார்.அவரது உரை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது உலகெங்கும் உள்ள பல இயக்கத்தின் அங்கத்தவர்கள் இணையவழி ஊடக அதைச் செவிமடுத்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
கனடாவைத் தலைமையகமாகக் கொண்டும் உலகில் சுமார் இருபது நாடுகளில் கிளைகளையும் நிறுவியும் வெற்றிகரமாக 50 ஆண்டுகளையும் கடந்து செயற்பட்டு வரும் அனைத்துலகத் தமிழர்களின் ஒரே அமைப்பான ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாடும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவும் அன்று ஜேர்மனி தேசத்தின் நகரில் அமைந்துள்ள KOPERNIKUS GYMNASIUM AULA மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி மாநாட்டில் பல கலை நிகழ்ச்சிகளும் கவிதா அரங்கு போன்றைவை இடம்பெற்றன. அத்துடன் குதிரையாட்டம் மற்றும் காவடி ஆட்டம். மயிலாட்டம் ஆகியவையும் இடம்பெற்று எமது பண்பாட்டுக் கோலங்களை இளம் கலைஞர்கள் அங்கு அடையாளமிட்டார்கள் .
மேற்படி இருபெரும் விழாக்களை ஏற்பாடு செய்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் . உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை. கணேசலிங்கம் அவர்களும் அனைத்துலக கிளைகளுக்கு பொறுப்பான ஜேர்மனி வாழ் திரு .ஆர். ராஜசூரியர் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களால் கௌரவிக்கப்பெற்றார்கள் அத்துடன் மேற்படி மாநாட்டையும் பண்பாட்டு விழாவையும் சிறப்பாக நடத்த உதவிய ஏனைய அங்கத்தவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரும் கௌரவிக்கப்பெற்றார்கள்
மேலும் அன்றைய இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாட்டிலும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவிலும் முக்கிய விருந்தினர்களாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கதின் பிரித்தானியக் கிளையிலிருந்து முக்கியமான உறுப்பினர்ளும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களில் பிரித்தானியாவிலிருந்து பிரித்தானியக் கிளையின் தலைவர் அமுது இளஞ்செழியன் அதிபரும் டாக்டருமான சரவணமுத்து பூலோகநாதன் கிளையின் செயலாளரான பொன்னம்பலம் வசந்தகுமாரன் கிளையின் ஆலோசகராக பணியாற்றும் முருகேசு தங்கராஜா கிளையின் ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் விமலதாசன் ஆகியோர் நேரடியாகக் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.அவர்களது வருகையான மாநாட்டுக்கும் உலகத் தமிழ்பண்பாட்டுக்கும் தூண்களாக விளங்கியது குறிப்பிடத்தக்கது..



































