சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025)
கம்போடியாவின் சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் அங்கோர் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும்
சோழப்பெருவேந்தர் இராஜேந்திரசோழரின் கடாரவெற்றியின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டம். சிறப்பு மாநாடு. (1024 -2025)
எதிர்வரும்
22 & 23 நவம்பர் 2025 அன்று
சியிம்ரீப், அங்கோர். நகரில் கம்போடியா தேசத்தில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் உலகமுழுவதுள்ள தமிழறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
இதையொட்டி
நவம்பர் 21 – 26 வரை ஆறு நாட்கள் பன்முக விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த 6 நாட்கள் விழாவிலும் பங்கேற்று அங்கோர்வாட் களப்பயணம் மேற்கொண்டு மாநாட்டு நிகழ்விலும் கலந்துகொள்வோருக்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்படுகின்றன.
நவம்பர் 21 முதல் 26 வரை 6 தினங்கள் தங்குவதற்கு .ஐந்து நட்சத்திர விடுதி, உணவு, கம்போடிய விசா, பேருந்து, அங்கோர்வாட், ஆயிரம் லிங்கங்கள், நாம் குல்லென் அருவி, படகு சுற்றுலா மற்றும் இரண்டு தினங்கள் மாநாட்டு நிகழ்வில் பங்கேற்பு..
அனைத்திற்குமான மொத்தக் கட்டணம். அமெரிக்க டாலர் $400 மட்டுமே. (Excluding Air Ticket)
இம்மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் பல்கலைக்கழகத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேற்படி கொண்டாட்டத்தில் மலேசியா. இலங்கை. சிங்கப்பூர், கனடா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களிலிருந்து பேராளர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த மாநாட்டை ஏற்பாடு செய்வதில் பின்வருவோர் தீவிரமாக ஈடுபட்டு; வருகின்றார்கள்
1. தங்கவேலு ஶ்ரீநிவாச ராவ்- தலைவர்- Cambodia.
2. தாமரை ஶ்ரீநிவாச ராவ் -செயலாளர்- Cambodia.
3. ராஜசேகரன் ஞானசேகரன் உப- தலைவர்- Cambodia.
4. மாணிக்கம் சதாசிவம்- இணைப்பாளர்- தமிழ்நாடு.
5. முருகேசன் ஞானமூர்த்தி- இணைப்பாளர்- தமிழ்நாடு
வரலாற்று நோக்கில் பல்லவர்களும், பாண்டியர்களும், சோழர்களும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அரசாண்டும்,நட்புறவு பாராட்டியும் மக்களோடு கலந்து தங்களது கலை, சிற்பம்,கோவில், பண்பாடு ஆகியவற்றை நிறுவி பெரும் பண்பாட்டுப் புரட்சியும்,வணிகத் தொடர்பும் செய்திருந்தனர்.மாநாட்டுத் தொடர்பானக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி:
angkorthamizhsangamtn@gmail.com
அனுப்ப வேண்டிய கடைசித் தேதி:
30.09.2025
மேற்கண்ட விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
திருமதி தாமரை சீனுவாசராவ்
வாட்ஸ்அப்: +91 9489902060
இரா. ஞானசேகரன்
துணைத் தலைவர்
வாட்ஸ்அப்: +855 81 41 21 79
























