அரியானா வாக்காளர் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர். தவறான வாக்காளர்கள், போலி முகவரிகள், கும்பல் வாக்காளர்கள் என ஏராளமான முறைகேடுகள் நிறைந்துள்ளன.
பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி ஒருவரின் புகைப்படம் (அவரது புகைப்படத்தையும் ராகுல் காந்தி வெளியிட்டார்) ராய் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 வாக்குச்சாவடிகளில் 22 இடங்களில் இடம்பெற்று இருக்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி கூறிய பிரேசிலை சேர்ந்த மாடல் அழகி குறித்து 24 மணி நேரத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூகுளில் தேடியுள்ளனர். அதில் அந்த பிரேசில் மாடல் அழகியின் பெயர் லாரிசா என தெரியவந்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்களா என பிரேசில் மாடல் அழகி லாரிசா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், “என்னை இந்தியனாக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம். நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
























