கனடாவில் இயங்கும் சரவணை மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்தப்படும் மகளிருக்கான தையல் பயிற்சிப்பாடநெறியினைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று 5/11/2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெ. ரஜீவன், வேலணைப்பிரதேச செயலாளர் திரு. அகிலன் மற்றும் யாழ்மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திரு. அ. சிவபாலசுந்தரன் ஆகியோர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
சரவணை கிழக்கு, சரவணை மேற்கு பிரிவு கிராம அலுவலர்களும் வேலணைப்பிரதேச சபை உறுப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் முதன்மை உரையாற்றிய முன்னாள் அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் இந்த தையல்பயிற்சியின் மூலம் சிறந்த தொழில் முனைவோராகி முன்னேற முயலவேண்டும் எனவும் சரவணை மக்கள் ஒன்றியம் கனடா இவ்வூர் இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில் சார் பயிறசிளை வழங்கும் ஒரு படியாக இந்த திட்டத்தை செயல்படுத்தவருகிறத என்று கூறியதுடன் இவ்வாறான முயற்சிகளை இங்குள்ள இளைய சமூகத்தினர் சரி வரப்பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தொடர்நது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரஜீவன் அவர்கள் இந்த முயற்சியைப்பாராட்டியதுடன் இங்கு பயிற்சி பெற்ற யுவதிகள் தங்கள் தொழிற்துறையை விரிவுபடுத்தி சர்வதேச சந்தைவாய்ப்ப பெறவேண்டும் என்றும் அதற்காக சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இங்கு காணப்பெறும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.
























