தமிழ்மொழி மீதான தாக்குதலுக்கு எதிராகத் தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடுவெல்லும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு, எஸ்ஐஆர் மூலம் வாக்குரிமை பறிப்பு, மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுனரின் அடாவடி, நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























