யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 24-11-2025 அன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபையின் அமர்வானது தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில், அன்று காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது.
20 உறுப்பினர்களில் 19 உறுப்பினர்கள் அன்றைய அமர்வில் கலந்துகொண்டனர். இந்நிலையில் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
























