((கனகராசா சரவணன்)
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்; கொண்ட 55 பேரை 30ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை (30-11-2025) உலங்கு வான் ஊர்தி மூலம் மீட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது
இவ்வாறு வெள்ளத்தில் இருந்து உலங்கு வான் ஊர்தி ஊடாக மீட்கப்பட்டவர்கள் சீனா பே விமான படை தளத்திற்கும் சேருவல மகாவலி விளையாட்டு மைதானத்திற்கும் கொண்டுவரப்பட்டனர்
இதேவேளை மேலும் 22 பேர் உலங்கு வான் ஊர்தி மூலம் மீட்க பட்டு வருகின்றதுடன் கடல் மற்றும் விமான மூலம் தொடர்ந்து மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது தெரிவித்தார்
























