யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய வர்த்தக நிலையங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன அடங்கியுள்ள இந்த பகுதியில் பல வெளிநாட்டு உல்லாசப்பயணிகளும் தங்கியுள்ளார்கள் என்றும் நல்லூர் ஆலயத்தின் வீதிகள் வெறிச்சோடிப் போயுள்ளதாகவும் எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
























