கனடா வன்னிச் சங்கத்தின் அவசர வேண்டுகோள்…….
இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களையும், . பெருமழை வெள்ள அபாயமும் அனர்த்தமும் இன்றுவரையில் தொடர்ந்தவண்ணம் உள்ளது. இன்றைய நிலையில் வீடுகளை வெள்ளம் மூடியமை காரணமாக, தரமற்ற கொட்டில்களிலும் இடைத்தங்கல் முகாங்களிலும் வாழ்கின்றவர்களில் கையில் தூக்கி வைத்திருக்கும் குழந்தைகள் தாயின் பசியினால் போதிய பாலூட்டல் இல்லாமல் உணவிற்காகத் தவிக்கின்றார்கள். அக் குழந்தைகளுக்குப் பால்மா வழங்க வேண்டிய கட்டாய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
ஒரு நேர இரண்டு நேர சமைத்த உணவுகள் இடைத்தங்கல் முகாங்களில் அளவோடு வழங்கப்படுகின்றது. ஆனால் இதுவரையில் யாரும் தாய் தூக்கி வைத்திருக்கும் குழந்தைகளுக்கான பால்மாக்களை யாரும் வழங்கவில்லை.
இங்கு முக்கியமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மிக வறிய குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளை வைத்திருக்கின்ற பெண்தலைமைத்துவக் குடும்பங்களையும் மிகக் குறைந்த வருமானமுடைய பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் முக்கியமாகக் கருத்தில் கொண்டு இச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
3 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தைக்கு 2 பால்மா பெட்டியும் ஒரு பிஸ்கட் பெட்டியும் கொடுப்பதற்கு ஒழுங்குகள் செய்கின்றோம். குடும்பம் ஒன்றிற்குக் குறைந்தது 2,900/= போதுமானதாகும்.
எனவே அன்பார்ந்த உறவுகளே 10 டொலர்கள்மட்டும் கொடுத்து ஒரு குழந்தைக்காவது உதவி செய்ய முன்வாருங்கள். இவ் உதவி தற்போது அவசரமானதும் அவசியமானதுமாகும்.
20 Dollarகளுக்குமேல் நிதியுதவி செய்கின்ற அனைவருக்கும் வரிக்கழிவு அறக்கட்டளைப் பற்றுச் சீட்டு (Charitable Donation Receipt) வழங்கப்படும் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.
நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் vunitedcare4kids@gmail.com மின்னஞ்சல் முகவரி ஊடாகப் பணத்தினை அனுப்பிவைக்கலாம். பணம் அனுப்பிய அதே மின்னஞ்சலின் ஊடாக கடவுச் சொல்லையும் (password) வரிக்கழிவுப் பற்றுச்சீட்டினை எழுதுவற்கான முழுப்பெயர் விலாசம் தொலைபேசி இலக்கம் என்பவற்றினைத் தந்துதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
கனடாவில் மேலதிக அவசரத் தொடர்புகளுக்கு:
வன்னிச் சங்கம்; 416 – 644 – 1113
கு. விஜயகுமார் (தலைவர்) 647 – 202 – 8286
க. தமிழ்ச்செல்வன் (உபதலைவர்)416-305-4887
சிவா இரட்ணசிங்கம் 416 – 520 – 1214.
வே. கணேசலிங்கம் 519-701-0096
பொ. சிவசுதன்) 416 – 558 – 1917.
இலங்கை வன்னிச் சங்க அமைப்பின் தொடர்புகளுக்கு:
தே. தேலக்சன் (தலைவர்) 94777396560
பொ. மதன் (செயலாளர்) 94779262965
க. கஜறகன் (பொருளாளர்) 94776152171
























