ந.லோகதயாளன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையாக அழிவடைந்த பாலத்திற்கு பதிலான பாலத்தை அமைப்பதற்காக 40 இந்திய இராணுவத்தின் பொருளியல்ப் பிரிவு ஒன்று கிளிநொச்சி வருகை தந்துள்ளது.
பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில. அழிவடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தை அமைக்க 6ம் திகதி சனிக்கிழமை மாலை இந்த இந்திய இராணுவ பொறியியல் அணி வருகை தந்துள்ளது.
இவர்கள் அன்றைய தினம் தமது பணியை ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பில் மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரனுடன் கலந்துரையாடினர்.
இப் பாலத்தை அமைக்கும் முயற்சி சுமார் ஒரு வார காலத்திற்குள் முழுமைப் படுத்தப்படவுள்ளது.
இப் பணிக்காக வந்த 40 இந்திய இராணுவ பொறியியல் பிரிவினரும் கொக்காவில் இராணுவ முகாமில் தங்கியுள்ளனர்என்பது குறிப்பிட்த்தக்கது.
























