எடப்பாடி பழனிசாமியின் பயத்தை மறைக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு என ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வியையே மக்கள் பரிசாக தருவார்கள். நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என்று பாஜக அரசுக்கு கோரிக்கை வைக்கக் கூட எடப்பாடிக்கு துணிவில்லை. எடப்பாடி பழனிசாமியின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள். அதிமுக பொதுக்குழுவில் ‘அதிகாரம்’ என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார். வாக்குறுதியாக சொல்லப்படாத இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் போன்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சொல்லியது மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுவதாலேயே எடப்பாடி பழனிசாமி பொய்யையும் அவதூறையும் பரப்பி ஆதாய அடைய முயற்சிக்கிறார். பாஜகவின் மதவெறி கொள்கைக்கு எதிரியாக இருப்பது திமுக மட்டுமல்ல தமிழ்நாடே என்பதால் தமிழ்நாட்டுக்கு துரோகத்தையும் வஞ்சகத்தையுமே மட்டுமே மத்திய பாஜக அரசு துணிந்து செய்கிறது. அப்படியிருந்தும் பாஜகவுடன் கூட்டணிவைத்து எட்டப்பன் வேலைபார்க்கும் எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























