(மன்னார் நிருபர்)
(15-12-2025)
அகில இலங்கை கம்பன் கழகத்தின் நிதி உதவியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 15ம் திகதி அன்றைய தினம் திங்கட்கிழமை (15) மாந்தை மேற்கில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பிரேம் குமார் தலைமையில் இடம்பெற்றது.
புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அடம்பன் வடக்கு,வாமதேவ புரம், புளியங்குளம் மற்றும் வேப்பங்குளம் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவு பொதிகள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் உதவியுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் பிரேம் குமார் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்துள்ளனர்.
























