இலங்கைத் தீவை தாக்கி அழித்த ‘டித்வா’ புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு
ஆகியவை தொடர்பாக ஒன்றாரியோ பாராளுமன்றத்தில்
உணர்வுபூர்வமாக விளக்கமளித்த எம்பிபி லோகன் கணபதி!
Speaker,
I rise today with a heavy heart to speak about the deadliest cyclone – Ditwah, which destroyed the island of Sri Lanka on November 28th, leaving behind unimaginable loss.
This is even worse than the 2004 tsunami – more than 600 people have died, 190 remain missing, over 500,000 families have been displaced, and more than 1.7 million have been affected.
The Central and up-Country regions, especially Kandy, Nuwara-Eliya, and Badulla—were hit the hardest, with entire villages lost to landslides.
Severe flooding also affected places like Puttalam, Gampaha, Mannar, Mullaitivu, and more leaving communities isolated and homes destroyed.
Speaker, More than 400,000 people in Ontario have family in Sri Lanka, and many are deeply concerned about the safety and well-being of their loved ones, including my riding of Markham-Thornhill. The resilience of the people will help them heal and emerge stronger than ever on this beautiful island in the Indian Ocean.
At this time of great suffering, I urge everyone to stand together in support of Sri Lanka as people begin rebuilding their lives. Dreams will live, and hope will rise again.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
நவம்பர் 28 ஆம் திகதி இலங்கைத் தீவை அழித்து, நினைத்துப் பார்க்க முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்திய, மிகவும் கொடிய சூறாவளியான டிட்வாவைப் பற்றிப் பேசுவதற்காக இன்று நான் கனத்த இதயத்துடன் இந்த சபையில் எழுந்து நிற்கின்றேன்.
இது 2004 -இல் நடைபெற்ற சுனாமியை விட மோசமானது என்பதைக் குறிப்பிடுவதோடு. இதுவரையில் 600 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், 190 பேர் காணாமல் போயுள்ளனர். 500,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. மேலும் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் பகிர்ந்து கொள்கின்றேன்..
இலங்கையின் மத்திய, மலைநாட்டுப் பகுதிகள், குறிப்பாக கண்டி, நுவரெலியா, பதுளை போன்ற பல மலைப்பகுதிகள் நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நிலச்சரிவுகளால் சில கிராமங்கள் முற்றாகவே புதையுண்டு போயுள்ளன.
பெரு வெள்ளத்தால் புத்தளம், கம்பஹா, மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன. இவ்விடங்களில் அநேகமான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒன்ராறியோவில் வாழும் 400,000 க்கும் மேற்பட்ட இலங்கை மக்களின் உறவினர் இலங்கையில் வாழ்கின்றனர். இங்குள்ள பலர் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். இவர்களுள் மார்க்கம்-தோர்ன்ஹில் பகுதியில் வாழும் மக்களும் அடங்குவர் என்பதையும் நான்குறிப்பிடவிரும்புகின்றேன்..
இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்த அழகான தீவில் மக்களின் மீள் எழுச்சியானது, அவர்கள் நலம் பெற்று முன்னெப்போதையும் விட வலுவாக வெளிப்பட உதவும்.
பெரும் துன்பம் தொடர்கின்ற இந்த நேரத்தில், மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் இவ்வேளையில் இலங்கைக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைந்து நிற்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
கனவுகள் வாழும், நம்பிக்கை மீண்டும் மலரும்.
நன்றி!
























