யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார்
இலங்கையில் இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய ரண களத்துக்கு மத்தியிலும் வடக்கிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் மீள் இணைவு ஒன்று ”வரும் ஆனால் வராது” என்ற நிலையிலுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை இலக்கு வைத்து இடம்பெற்றுள்ளது. இலங்கையின் அரசியலில் தமிழ் தேசிய கட்சிகள் மத்தியில் எப்பொழுதும் தனக்கான இடத்தைக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக்கட்சிகளின் கூட்டாக உள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையிலேயே இந்த மீள் இணைவு இடம்பெற்றுள்ளது .

பதில் தலைவராக .சி.வி.கே. சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ. சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள்புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் (புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் பங்காளிக் கட்சித் தலைவர்களாகவுள்ளனர்.

இவர்களில் சுரேஷ் பிரேமச்சந்திரன் பல குற்றச்சாட்டுக்களுக்காக மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள். கிழக்கு மாகாணத்தில் மகிந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கான லைசன்ஸ்களைப் பெற்றும் இன்று அதன் மூலம் கிடைக்கும் கொமிசன் பணத்தில் செல்வந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்., அடுத்தவர் செல்வம் அடைக்கலநாதன் பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கொண்டவராக மக்களால் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டவர் தன்னை மீண்டும் நிமிர்த்திக் கொள்ள இந்த மோசடிக்காரர்களின் கூட்’டில் இணைந்து கொண்டுள்ளார்.

ஆனால் ரொலோ இயக்கம் இவரை பதவி விலகும்படி மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளது. ,அடுத்தவர் முருகேசு சந்திரகுமார் என்பவரும் ஒரு செல்வாக்கற்றவர். டக்ளஸ் தேவானந்தா அவர்களால் துரத்தப்பட்டவர். இறுதியாக எம்.ஏ. சுமந்திரன் பற்றிய குற்றச்சாட்டுக்களை எழுத்தில் வடிக்க நூற்றுக்கணக்கான பக்கங்கள் தேவைப்படும்.
இவற்றை வடக்கு கிழக்கு வாக்காளப பெருமக்கள் தங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்
























