சிரியாவின் ஹோம்ஸ் நகரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் இஸ்லாமியர்கள் மத வழிபாடு செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த மசூதியில் திடீரென குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பில் மசூதியில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 21 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
























