தையிட்டி விகாரைக்கு அருகில் நாம் நடத்திய போராட்டத்தின் போது பொலிசார் என்னைத் தாக்கிய விதமானது கொலை செய்யவோ அன்றி என்னை முற்றாக ஊனமாக்கவோ பொலிசார் மேற்கொண்ட முயற்சி என்று தமிழ் உணர்வாளர் வேலன் சுவாமிகள் அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்
தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தம்மை பொலிஸார் தாக்கியமை ஒரு கொலை முயற்சி என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிராந்திய செய்தியாளர்கள் கலந்து கொண்ட ஒரு சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைப் பொலிஸாரைப் பொறுத்தவரையில் நான் ஒரு மதகுரு என்பது அவர்களுககு நன்றாகவே தெரியும். இவை அனைத்தையும் தெரிந்து கொண்டு தான் என்னைப் பலவந்தமாக தாக்கி கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட போது வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து நாம் வீதிக்கு அருகில் நின்று போராட்டம் செய்கின்றோம் என்ற போது எம்மைப் பொலிஸார் வீதியை நோக்கி பலவந்தமாக தள்ளினார்கள்.
இதனையடுத்து நான் ஒதுங்கியிருந்தபோது தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸார் ஆகியோர் என்னைத் தேடி வந்து கழுத்தில் இருந்த உருத்திராட்சிர மாலையை அறுத்து கழுத்தில் திருகி அடிக்க பின்னர் தாக்க ஆரம்பித்தனர் ஆரம்பித்தனர். இதன்போது, எனது கழுத்துப்பகுதிக்கு எனது கையை நான் கொண்டு சென்ற போது அதை நசித்து அசைக்க இயலாமல் செய்து விட்டார்கள்.
இந்தநிலையிலே, பொலிசார் என்னை வாகனத்தை நோக்கி இழுத்துச் சென்று அதனோடு தள்ளியபோது வாகனத்தின் பின்பகுதியில் இரும்போடு எனது பின் இடுப்புப் பகுதி மோதியது. பொலிஸாரின் இவ்வாறாக செயற்பாடுகளை பார்க்கின்றபோது என்னைக் கொலை செய்யவோ அன்றி என்னை முற்றாக ஊனமாக்கவோ தான் முயன்று இவ்வாறு தாக்கியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார் வேலன் சுவாமிகள் அவர்கள்
























