செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கேஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’. புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். புதுமுக நடிகர் – நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்களே. படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் விவேகா மற்றும் பத்மாவதி ஆகியோர் எழுதியுள்ளனர். 2005-ல் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் பதாகையை இயக்குநர் சுந்தர்.சி வெளியிட்டு, படத்தின் ஒரு பாடலையும் பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டி இருந்தார். இந்த நிலையில், ‘மாயபிம்பம்’ வருகிற 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு பதாகை வெளியிட்டு அறிவித்துள்ளது.
























