அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மாதகல் பாணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயம் மற்றும் ‘மாதகல் நுணசை முருகமூர்த்தி ஆலயம் ஆகியவற்றுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
அந்த ஆலயங்களை மீளமைக்கும் பொருட்டு திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட இருபத்தையாயிரம் [25,000] ரூபாவுக்கான காசோலைகளை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி ஆலய நிர்வாக சபையினரிடம் 22ம் திகதி வியாழக்கிழமை அன்று கையளித்தார்.
























