பொருளாதார நெருக்கடியால் டிசம்பர் 28 முதல் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வந்தது. இந்தத் தீர்மானத்தின் மூலம் ஈரானில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தும். மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில், 25 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, சீனா உள்ளிட்ட ஏழு நாடுகள் வாக்களித்தன. 15 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி,”இந்திய அரசின் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
























