இலங்கைக்கான கனடியத்தூதுவர் Isabelle Martin, அம்மையார் அவர்கள் புதிதாகப் பதவியேற்றவர். அவரை அண்மையில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட எமது பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் சந்தித்து பல விடயங்கள் தொடர்பாக உரையாடினார். அவரது அந்த விஜயம் பிற நன்மை தரும் விடயங்களைக் கொண்டதாக விளங்கியது. பல மனித நேயப்ப் பணிகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட சந்திப்புக்கள் ஆகியவற்றை மேற்கொண்டு அவர் திருப்தியுடன் கனடா திரும்பியுள்ளார்.யுனிற்றா நாதன் எம். பி அவர்களின் நற்பணி இங்கும் தொடர்கின்றது.
அது ஒரு புறம் இருக்க. இங்கு காணப்படும் படத்தில் உள்ள இரண்டு ‘அறியப்பட்ட’ அரசியல்வாதிகள்’ வேறு 3 நபர்களுடன் சேர்ந்து சில நாட்களுக்கு முன்னர் கனடியத்தூதுவர் Isabelle Martin, அம்மையார்ட அவர்களைச் சந்தித்துள்ளார்கள். .
இந்தக் குழுவில் அடங்கியுள்ள இரண்டு ‘அறியப்பட்ட’ அரசியல்வாதிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள். அத்துடன் தற்போது பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள அரசியல்வாதியோ மக்கள் பணியிலும் பார்க்க தனது சொந்தப் பணிகளிலேயே அதிக நேரத்தைச் செலவு செய்து நீதி மன்றம் வரையும் கொண்டு செல்லப்பட்டவர். அத்துடன் அவர் சார்ந்துள்ள கட்சியின் மத்திய குழுவானது அவரைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யும் வண்ணம் பல தடவைகள் கேட்டுக் கொண்டுள்ளது.
மற்ற பதவி ‘இல்லாத’ அரசியல்வாதியும் சாதாரணமானவர் அல்ல. அவரும் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற காலத்தில் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொண்ட ‘சில சலுகைளை’ தற்பொழுதும் அனுபவிப்பவர். அதை விட அவரால் தமிழ் மக்களுக்கு ஒன்றையும் “புடுங்க’ முடியாது என்பதும் மக்களுக்குத் தெரியும். அத்துடன் அவரது குடும்பமும் கனடாவில் தான் உள்ளது. அப்படியானால் இந்த சந்திப்பின் மூலம் அந்த இரண்டு ‘அறியப்பட்ட’ அரசியல்வாதிகளும் ‘எதையாவது’ கனடியத்தூதுவர் Isabelle Martin, அம்மையார் அவர்களிடமிருந்து பெற்றுவிட ஆசைப்பட்டிருப்பார்கள். மற்றைய மூவருக்கும் கனடியத்தூதுவர் Isabelle Martin, அம்மையாரைச் சநதித்தோம் என்ற ‘திருப்தி கிடைத்திருக்கலாம். மேற்படி சந்திப்பில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், எதிர்கால அரசியல் நகர்வுகள் உள்ளிட்ட முக்கியமான பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன என்று ஊடகங்களுக்கு இந்த . ‘அறியப்பட்ட’ அரசியல்வாதிகள்’ எழுதிக் கொடுத்திருக்கலாம். ஆமாம் ‘இவர்கள் இருவரும் ‘
எதிர்நோக்கும் பிரச்சனைகள், எதிர்கால அரசியல் நகர்வுகள்’ என்று அந்த செய்திக்கு அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் தலைப்பு இடவேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் விரும்புகின்றார்கள்!
























