மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி நடத்திய பொங்கல் விழாவில் ஒன்றாரியோ மாகாணப் பிரதமர் டக் போர்ட் புகழாரம்!
“எமது ஒன்றாரியோ கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கத்தில் மாகாண சபை உறுபபினராகவும் பாராளுமன்றச் செயலாளராகவும் அங்கம் வகிக்கும் நண்பர் லோகன் கணபதி அவர்கள் கனடியதமிழர்களின் சிறந்த அர்ப்பணிப்புகளுக்கு அடையாளமாகத் திகழ்கின்றார்! அவரது அர்ப்பணிப்பையும் சேவை மனப்பான்மையையும் நான் அவரோடு பழகத் தொடங்கிய அல்லது பணியாற்றத் தொடங்கிய காலம் தொடக்கம் அவதானித்துள்ளேன்.
இன்று நீங்கள் அனைவரும் அவரது வழிகாட்டலில் இன்று உங்கள் பண்பாடு மற்றும் கலைகளைப் பேணுதருக்கு உதாரணமாக விளங்கும் பொங்கல் மற்றும் தமிழர் மரபுரிமை மாதம் ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டாடுகின்றீர்கள். எமது மாகாண அரசாங்கமும் இவ்வாறான தமிழர்களின் பண்பாட்டு விழாக்களுக்கு ஆதரவு வழங்குவதில் பெருமிதம் அடைகின்றது’
இவ்வாறு கடந்த 24-01-2026 அன்று சனிக்கிழமை அன்று மார்க்கம் நகரில் அவரது தொகுதியில் அமைந்துள்ள ‘வேர்டிக் மண்டபத்தில் ;நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி நடத்திய பொங்கல் விழாவில் ஒன்றாரியோ மாகாணப் பிரதமர் டக் போர்ட் அவர்டகள் புகழாரம் சூட்டினார். !
மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் தனது அலுவலக உத்தியோகத்தர்கள்-குடும்பத்தினர் – மற்றும் தொண்டர்கள் ஆகியோரின் துணையுடன் மேற்படி அழகியப் பெருவிழாவை நடத்தினார். ஸ்காபுறோவில் இயங்கிவரும் ‘விஜயா யுவல்லறி; தங்க நகை விற்பனை நிறுவனம் மேற்படி ‘பொங்கல் விழாவிற்கு பிரதான அனுசரணை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் ஒன்றாரியோ மாகாண அரசின் அமைச்சர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் சிவாச்சாரியப் பெருமக்களும் மேற்படி விழாவில் கலந்து சிற்பபித்தார்கள். கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம் பெற்றன
Uthayannews LJI Journalist Ganesh






























