ந.லோகதயாளன்.
தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2025 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டவர்களில் 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் மன அழுத்தம் மற்றும் குடும்ப வன்முறை மட்டுமன்றி காதல் தோல்விகள் உள்ளிட்ட காரணங்களால் ஆண்டுதோறும் தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கையும் அதகரித்த வண்ணமே உள்ளது.
இந்த வகையிலேயே 2025 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டவர்களில் 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு 2023 ஆம் ஆண்டு 60 பேரும், 2024 ஆம் ஆண்டில் 76 பேர் மட்டுமே தற்கொலைக்கு முயன்றவர்கள் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளனர் என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த ஓர் விண்ணப்பத்திற்கு போதனா வைத்மியசாலை நிர்வாகத்தினால் பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கைகளின் அடிப்படையில் 2023 முதல் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம் 2021 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டுகளில் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2996 எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
























