திருச்சி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வை முறையாக நடத்த முடியாத அவலம் தி.மு.க. ஆட்சியில் உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை பெற முடியவில்லை. தமிழ்நாட்டிற்கு இன்னும் முழுநேர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. தி.மு.க. – காங்கிரஸ் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அலட்சியத்தின் காரணமாக திட்டங்கள் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
























