ஆட்சியில் பங்கு விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: முதல்-அமைச்சர் சொன்னது அவரது கருத்து, அவரது கட்சியின் கருத்து. தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பற்றி அவர் பேசியுள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும், ஒரு கருத்து இருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். முதல்-அமைச்சர் கருத்தால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித பிளவும் இல்லை, எதிர்பார்ப்பு குறித்து எங்கள் தலைமை பேசி விட்டார்கள். இறுதி முடிவை இரு கட்சிகளின் தலைமைகள் கூடிப் பேசி முடிவு செய்வார்கள். எங்களுக்குள் இருக்கும் விஷயங்களை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
























