தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோழர்கள் டி.எம்.மூர்த்தி – ஒருங்கிணைப்பாளர், க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன் குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
























