கனடாவில் நன்கு அறியப்பெற்ற வீடு விற்பனை முகவர் நிறுவனத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் முகவர் ரஜீவ் கோணேஸ் அவர்களின் நிர்வாகத்தில் இயங்கும் REMAX Community Realty Inc தனது வருடாந்த குளிர்கால விருது வழங்கும் விழாவை கடந்த 07-02-2026 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி விருதுகள் வழங்கும் விழாவை சிறப்பாக நடத்த ரஜீவ் கோணேஸ் அவர்களின் குடும்பத்தினர்- அவரது சகோதர சகோதரி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரான ஹரி ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் மற்றும் நகரசபை உறுப்பினர் நீதன் சண்முகராஜா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துரைகளையும் வழஙகி பின்னர் விருதுகளைப் பெற்ற வீடு விற்பனை முகவர்களுக்கும் விருதுகளை வழங்கினர்.
அத்துடன் அன்றைய நிகழ்வில் ஸ்காபுறோவில் அமையப் போகின்ற ‘தமிழர் சமூக மையத்தின்’ நிதிக்காக REMAX Community Realty Inc நிறுவனத்தின் தலைவர் மற்றும் வீடு விறபனை முகவர்கள் இணைந்து வழங்கிய 5 லட்சம் டாலர்கள் தமிழர் சமூக மையத்தின் சார்பில் அங்கு கலந்து கொண்ட சாந்தா பஞ்சலிங்கம் அவர்களிடம் கையளிக்கப்பெற்றது. நூற்றுக்கும் அதிக மான வீடு விற்பனை முகவர்கள் தங்கள் விற்பனைத் திறனுக்கு ஏற்ப தங்கள் விருதுகளைப் பெற்று மகிழ்ந்தனர்.!

































