‘ஸ்ரோவில் தமிழர் சங்கம்’ ஏற்பாட்டில் 2026ம் ஆண்டிற்குரிய ‘தமிழர் மரபுரிமை’ மாதக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது
கனடா ஸ்ரோவில் நகரத்தில் வாழும் தமிழ் மக்களால் ஆரம்பிக்கப்பெற்று தொடர்ச்சியாக இயங்கிவரும் ‘ஸ்ரோவில் தமிழர் சங்கம்’ தனது 2026ம் ஆண்டிற்குரிய ‘தமிழர் மரபுரிமை’ மாதக் கொண்டாட்டத்தை கடந்த 30-01-2026 அன்று நடத்தியது.
அன்றைய தினம் கலைநிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெற்றன. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் ஆகியோரின் வாழ்த்துரைகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த இந்த விழாவில் ஸ்காபுறோவில் அமையவுள்ள ‘தமிழர் சமூக மையம்’ கட்டட நிதிக்காக மக்கள் வழங்கிவரும் அன்பளிப்புக்கள் வரிசையில் ஸ்ரோவில் நகரில் வாழும் தொழிலதிபர் தாஸ்’தேவதாஸ் மற்றும் சட்டத்தரணி லக்சுமி வாசன் ஆகியோர் குடும்பங்கள் வழங்கிய முறையே 25,000 டாலர்கள் மற்றும் 10,000 டாலர்கள் ஆகியவற்றிக்கான மாதிரிக் காசோலைகள் தமிழ்ச் சமூக மைய நிதி சேகரிப்புக்குழுவின் சார்பில் ரமணன் சந்திரசேகரமூர்த்தி அவர்கள் பெற்றுக்கொண்டார். படங்களில் ‘ஸ்ரோவில் தமிழர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான சிவன் இளங்கோ மற்றும் சுந்தரலிங்கம் ஆகியோரும்’ நிற்பதைக் காணலாம்.






























