தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொகுதி-IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள். மேலும், சென்னை, அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரியில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 8 குடியிருப்புகளை திறந்து வைத்து, சென்னை, செனாய் நகரில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, அரசு அலுவலர்கள் முன்னணி நிறுவனங்கள் வாயிலாக இணையவழியில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட “திறன் 3600” என்ற இணையதளத்தையும், அனைத்து தேர்வு முகமைகள் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிக்கைகளை கைபேசி வழியாக அறியும் வண்ணம் “தேர்வுக்களம்” எனும் ஒருங்கிணைந்த கைபேசி செயலியையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2025-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தொகுதி-IV உள்ளிட்ட போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 9,801 நபர்களில் இருந்து 4213 நபர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
























