ஏ.ஐ. மாநாடு நடைபெற்ற இடத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் மேலாடையின்றி போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 4 தலைவர்களை கைது செய்து டெல்லி போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி. நாட்டை அவமானப்படுத்த காங்கிரஸ் இளைஞர்களை பயன்படுத்துகிறது. இஐது விட பெரிய அவமானம் இருக்க முடியுமா?. இளைஞர்கள் பிரிவு மூலம் ஏ.ஐ. மாநாட்டில் போராட்டம் நடத்தியம் காங்கிரஸ் நாட்டிற்கு எதிராக மிகப்பெரிய பாவம் செய்துள்ளது. ஒட்டுமொத்த நாடும் காங்கிரஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்தியா வளரும்போது, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கவலைப்படுகிறார்கள். தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதை எப்போது நிறுத்துவீர்கள்?. இவ்வாறு கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
























