ஏற்கெனவே, மிசிசாகா மற்றும் பிரம்ரன் ஆகிய நகரங்களில் தங்கள் வர்த்தக நிறுவனங்களை நடத்திவரும் THAMOR GROUP OF COMAPANIES நிறுவனத்தின் மூன்றாவது கிளை மார்க்கம் நகரில் கடந்த 20-02-2026 அன்று வெள்ளிக்கிழமையன்று Unit 5- 7595 Markham Road L3S 0B6 என்னும் விலாசத்தில் கோலாகல திறந்து வைக்கப்பெற்றது!
நிறுவனத்தின் உரிமையாளர்களான திருவாளர் தாமோதரம்பிள்ளை யோகநாதன் மற்றும் அவரது நான்கு புதல்வர்கள் மேற்படி கிளை நிறுவனத்தின் திறப்பு விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
அன்றையதினம் பல வர்த்தகப் பிரமுகர்கள்- நண்பர்கள்- ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டு தங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
அன்றைய தினம் ஒரு விசேட அறிவிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி வரை இந்த மார்க்கம் கிளையில் அடைவு வைப்பவர்களில் 1000 டாலர்களுக்கு குறைவான அடைவுத் தொகையைப் பெறுபவர்களுக்கு ஓரு மாத வட்டி அறவிடப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பெற்றது.
தொலைபேசி மூலமாக மேற்படி நிறுவனத்தை தொடர்பு கொள்ள 905 667 7200 என்னும் இலக்கத்தை அழைக்கவும்!




























