முடியாதுஎன்பது மூடத்தனம்
முடியும் என்பதே மூலதனம்
முடிவுவருவதுநிச்சயம்
மடியும் வரையும் போராடு
அடிமேல் அடியைஅடித்தால்
அம்மியும் நகரும் அன்றோ
அடிகளைநீயும் அளந்தால்
அடைவாய் இலக்கைஇலகுவில்!
நடக்காதுஅவநம் பிக்கை
நடக்கும் தன்னம் பிக்கை
கடக்கசிரமமெனகருதாதே
கடந்துகாட்டிப் பேரெடு
இடக்குமுடக்காய் இயம்புவார்
எதையும் காதில் வாங்காதே
மடக்கச் சிலபேர் முயலுவார்
மலைபோல் நிமிர்ந்துநின்றுபார்!
உந்தன் எதிரிஉலைவு
உடனேஅவனைவிரட்டிடு
பந்தநண்பன் பயிற்சியே!
பரிவுடன் அணைத்துவைத்திடு
எந்த இடருவருகினும்
எடுத்தகருமம் விடாதே!
அந்தகன் அருகில் வந்தாலும்
அவனையும் எதிர்க்கத் தயங்காதே!
வெற்றியைத் தேடிவிரையாதே!
வலிந்ததுவாசல் வந்திடுமே;
மற்றவர் உன்னை மடக்கலாம்
மனதைத் தளரவிடாதே!
சற்றுத் தயங்கிநின்றால்
தளர்ச்சிஉன்னைத் தடுத்திடும்
கற்றவர் உன்னைக் கவனிப்பர்
கலங்காக் காலடிஎடுத்து வை!
(அந்தகன்———-இயமன் உலைவு—-ஊக்கமின்மை)
ஆக்கம் …….
பாவலர் மார்க்கம் சந்திரன் 416 844 7453
























