இலங்கைக் கடற்படை மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியதால் அது சர்வதேச நெருக்கடியில் சிக்குமா?
தீயாய் எரிந்து கொண்டிருக்கும் ஈரானிய – இஸ்ரேல் – அமெரிக்க யுத்தகளத்துக்கு மத்தியில், இந்து சமுத்திர கடல் பரப்பில் ஈரானிய கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி கப்பலின் ஏவுகணை மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளது.
இலங்கைக்கு அருகில் இவ் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளமையால், இலங்கை மனிதாபிமான அடிப்படையில கப்பலில் இருந்த தத்தளித்துகொண்டிருந்த ஈரானிய மாலுகிகளை பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.தற்போது, இலங்கை அரசியலில் ராஜதந்திர அணுகுமுறை மூலம் பரபரப்பாக ஈடுபட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் 22 மில்லியன் இலங்கை மக்களினுடைய பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக இவை பேசுபொருளாக மாறியுள்ளது.
ஈரானுக்கு சொந்தமான IRINS Denaஎன்கின்ற போர்கப்பல், பிப்ரவரி 18–25 வரை Bay Of Bengal பகுதியில இந்தியாவின் விருந்தாளியாக போர் பயிற்சிகளில் ஈடுபட்டதன் பின்னர் தரித்து நின்றது.
பயிற்சியின் பின் இந்திய கடற்படையோடு கைகுலுக்கி விடைபெற்றது. ஆனால் இப்பொழுது, ஈரான் போரின் காரணமாக இந்த பயிற்சிகள் முடிந்து ஈரானுக்கு போர்கப்பல்கள் உடனடியாக நகர்த்தப்பட வேண்டியதால் கப்பலானது ஈரானை நோக்கி இந்து சமுத்திரத்தில் நகரும் போது அமெரிக்காவின் நீர்மூழ்க்கி கப்பல் (Submarine) இல் இருந்து பாய்ந்து சென்ற ஏவுகணை தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. தகவலினை (மார்ச் 4 2026), வெள்ளை மாளிகையின் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் – Pete Gantz ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி, உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அறிவித்ததை தொடர்ந்து, கப்பலில் 180க்கும் அதிகமான ஈரானிய கடற்படை வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்ததாகவும், அதில் மூழ்கடிக்கப்பட்டதிலிருந்து இப்பொழுது 80–100 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று New York Times ஊடக பத்திரிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் 100 பேர் இதுவரை வரை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
New York Times பத்திரிகை முக்கியமாக குறிப்பிடுவது என்னவென்றால், 32 வீரர்களை காயங்களுடன், மோசமான நிலையில் இலங்கை அரசு காப்பாற்றி இருக்கிறது. அதனுடைய விமானப்படை கப்பல்கள் மற்றும் கடற்படைகள் சென்று, காலியிலிருந்து 40கடல் மைல் தொலைவில் இந்து சமுத்திரத்தில் அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றி, ஆம்புலன்சில் (Ambulance) வைத்தியசாலையில் சேர்த்துவிட்டதாக எழுதியுள்ளது.
அதில், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களுடைய பெயரை மேற்கோள் காட்டி,32 பேரை காப்பாற்றி இருப்பதாக உத்தியோகபூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது, சமூக வலைத்தளங்களிலும் இது பேசுபொருளாக உள்ளது.
இந்தியாவிலிருந்து புறப்பட்டு சென்ற கப்பல், இலங்கை இந்து சமுத்திரத்தில் நகர்ந்தது. இந்தியாவில் தான் கூட்டு பயிற்சி பெற வந்தது. ஆகவே,மூழ்கடிக்கப்பட்ட கப்பலிலிருந்து அபாய சமிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இந்தியா முன்னதாக வந்து காப்பாற்ற வேண்டும். அல்லது அதன் உளவு தகவல்கள் உதவி தாக்கத்தை தவிர்த்திருக்க வேண்டும்.
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் இருக்கின்ற தனது கூட்டாளி பயிற்சிக்கு வந்த போர் கப்பல் இருந்தாலு அது தாக்கப்பட்ட பின்னான மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா காய் நகர்த்தி இலங்கையிடம் பந்தை எறிந்து விட்டதாக தெரிகிறது. இவற்றில் ராஜதந்திர கையாடல்கள் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளர் அறிவித்ததன்படி இதற்குள் இலங்கை மீதுஒரு ராஜதந்திர உந்துதல்/அழுத்தம் இருந்ததாகத்தான் அவர் மேற்கோள் சுட்டி காட்டியிருந்தார். உலக செய்திகள் அதைத்தான் தெரிவிக்கின்றன.
ஈரானுடைய உயர்ஸ்தானிகர் முன்பே இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த யுத்தத்துக்கு நீங்கள் நடுநிலை வகிக்கலாம் ஆனால் எங்கள் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கண்டித்து, அறிக்கைகள் விட வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அவை பாராளுமன்றம் வரை ஒலித்தது.
இந்த விடயத்தை உற்று கவனித்து பார்த்தால், அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளர் இலங்கை மீது ராஜதந்திர அழுத்தங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். ஈரான் வீரர்களை காப்பாற்றுவதற்கு, இப்போதைய பதற்ற நிலைமையில் இலங்கை மீட்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறது.
ஏனென்றால் இலங்கைக்கு அருகில் தான் சம்பவம் நிகழ்ந்ந்திருக்கிறது. மூழ்கி கொண்டிருப்பதையும் பார்த்துக் கொள்ள முடியாது. இலங்கையில் இருக்கின்ற ஈரானிய உயர்ஸ்தானிகர் ஆலயம் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் வந்திருக்கலாம். சில இராஜதந்திர நகர்வு மற்றும் உடனடி மனிதாபிமான உதவி என்ற நிலையில் இப்போதைய நிலைக்கு 32 பேரை இலங்கை கடற்படை காப்பாற்றி Ambulance மூலம் உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்துள்ளது.
இனி என்னென்ன நடவடிக்கைகள்? எப்படியான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது யாருக்கு கையளிக்க போகின்றார்கள்? ஈரானிய உயர்ஸ்தானிகள் ஊடாக ஈரானுக்கு அனுப்பி வைக்க போகிறார்களா என்பதெல்லாம் பாதுகாப்பு துறை சார்ந்த விடயங்கள். ஆனால் அருண் ஹேமச்சந்திர அவர்களுடைய நாமம்,இன்றைக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு செயலகம் வரைக்கும் ஒலித்திருக்கிறது.அவற்றைவிட New York Times மற்றும் Washington Times பத்திரிகைகளில் கூட பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு இலங்கை இப்பொழுது சம்பந்தப்பட்டு போய்கொண்டிருக்கிறது.
வடகொரியா,ரஷ்யா மற்றும் சீனா ஈரான் சார்பு நிலைப்பாடுகளை எடுத்திருந்தாலும் மற்ற நாடுகள் அதாவது இந்தியா பிரிக்ஸ் கூட்டமைப்பில் இருக்கிறது . அந்த கூட்டாளி தாக்கப்படும் போது மௌனம் காக்கிறது.
ஈரானுடன் ஏவுகளைகளால் தாக்கிய Qutar (கட்டார்),UAE (ஐக்கிய அரபு இராச்சியம்) மற்றும் Kuwait (குவைத்) போன்ற நாடுகளிடம் தொடர்பு கொண்டு நரேந்திர மோடி நிலைமை விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தன்னுடைய BRICS கூட்டணியில் இருக்கும் நட்பு நாடான ஈரானிடம் எவ்வித தொடர்பு ஏற்படுத்தவில்லை அல்லது அதற்கான முகாந்திர செய்திகள் வெளிக்கிளம்பவில்லை.
அதைவிட கடலில் மரணமைடந்த ஈரானிய வீரர்கள் 80 பேரின் சடங்களை இலங்கை மீட்டிருக்கிறது.
அந்த சடங்களை வழங்க ஈரான் கோரிக்கை விட்டபோதும் இலங்கை இத்தகைய சூழலில் வழங்க முடியாது என கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதைவிட காப்பாற்றப்பட்ட வீரர்களை அமெரிக்கா ஒருவேளை கேட்டால் இலங்கை நிலை இராஜதந்திர ரீதியில் இன்னும் சங்கட நிலைக்கு தள்ளப்படும்.
அதைவிட இன்னொரு ஈரானிய கப்பல் பாணம்துறைக்கு மிக அருகில் நின்றுகொண்டு அவசர உதவியாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட கோரிக்கை விடுத்திருக்கிறது. அதை மிக ஆழமாக இலங்கை பரிசீலித்து வருகிறது. ஆக இப்பொழுது ஏற்பட்டிருக்கும் ராஜதந்திர திருசங்கு நிலைமையை இலங்கை எப்படி அமெரிக்காவை சமாளிக்கப் போகிறது,இஸ்ரேலினுடைய தூதரகங்களோடு சமாளிக்கப் போகிறது ஈரானோடு சமாளிக்கப்போகிறது என்பதுதான் இப்போது உள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஒரு அவசியமான நடவடிக்கையாக இருக்கிறது. ஆகவே, ஈரானிய கப்பலை காப்பாற்றி அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து கொண்டிருந்த காயமடைந்த வீரர்களை மனிதாபிமான நடவடிக்கையில் காப்பாற்றி உள்ளோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலைமையிலே, இலங்கை செய்தது மனிதாபிமான நடவடிக்கை என்பதால் வரவேற்கத்தக்கது. கப்பல் கடலில் மூழ்கி இருந்த நிலையில், பாதுகாப்பாக மீட்டுள்ளது. ஏனைய ஈரானிய மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது .ஆனால்,இலங்கை சார்பான ஈரானிய, அமெரிக்க,இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகளின் ராஜதந்திர சிக்கல்கள் மற்றும் இதற்கான எதிர்பாராத சிக்கல்களை எவ்வாறு கையாளப் போகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
கு.மதுசுதன்
B.Sc(Hons),M.Sc
அரசியல் ஆய்வாளர்
























