(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி)
பண்பும் பக்குவமும் இறை பக்தியும் நிறைந்த ஒரு
பேராண்மை விண்ணுலகை நாடி ஆண்டுகள் மூன்றாகின
அன்னாரின் கனிவான பார்வை எப்போதும் எம்மீதுதான்
என்புருகிப் போனாலும் எம் பார்வையில் அவர் உருவம்!
இனிவரும் காலங்களும் அப்படியே அசலாய்த் தெரியும்!
நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் உழைத்தவர்
எமக்காய் ஆலயம் சென்று வழிபட்டவர்
எமக்காய் வியர்வை சிந்தி விதைகளை நாட்டியவர்
எமக்காகவே அனைத்தையும் செய்ய உடலை வருத்தியவர்
அப்படியாயின் நாம் எப்படி ஐயா தங்களை மறப்போம்?
உங்கள் புதல்வன் தன் உ யிரை தாயக மண்ணுக்காய் ஈந்தபோது
அவனுடலை புதைத்து விட்டு
துயிலும் இல்லத்திலிருந்து வாழும் இல்லம் நோக்கி
தலை நிமிர்ந்து திரும்பியவர் நீங்கள்
உங்கள் கண்களில் நாம் கண்ணீரைக் காணவில்லை
பல கனவுகளின் அதிர்வுகளை தங்கள் முகத்தில் கண்டோம்
உங்கள் பூவுலகப் பிறப்பு எமக்கு கிடைத்த வரம் ஐயா
வாழ்க்கைத் துணைவராகவும் தந்தையாகவும் இன்னும் பலவாகவும் உறவுகளைத் தாங்கி
எங்கள் அனைவரையும் தாங்கிக் கொண்டவர் தாங்கள் என்பதை ஊரறியும்
தங்கள் இழப்பு ஒரு மரணம் அல்ல எமக்கு ஐயா
அது ஒரு உதாரணமாய் எம் வாழ்க்கைக்கு உதவிநிற்கும்
என்றே நாம் இறுதி வரை நம்பி வாழ்வோம்!
ஆண்டுகள் ஒவ்வொன்றாய் எமைக் கடந்து சென்றாலும்
நாயகனை நாம் என்றும் கடவோம். அவர் வழி தொடர்வோம்!
இங்ஙனம் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: (416) 888-1128, (647) 885-3012, (905) 205-1070























