கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் யூத். படவிழாவில் சுராஜ் வெஞ்சுரமூடு பேசும்போது, “இது என்னுடைய இரண்டாவது தமிழ் திரைப்படம். இந்த படத்தில் இப்படியான ஒரு கேரக்டரை கொடுத்த இயக்குநர் கென்னுக்கும், தயாரிப்பாளர் கருப்பையாவுக்கும் என் நன்றிகள். இந்த படத்தில் நடித்த அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தேவதர்ஷினி, நளினி போன்ற அனுபவமுள்ள நடிகைகளுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. அதேபோல் அனிஷ்மா, மீனாட்சி, பிரியாஞ்சி ஆகிய ஹீரோயின்களும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். சின்னாவின் மிமிக்ரி திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். கென் கேரளா வந்து கதையை சொன்னபோது ஒவ்வொரு கேரக்டரின் உணர்ச்சிகளையும் நடித்துக் காட்டி கதையை விவரித்தார். கூடவே மொபைலில் படம் முழுவதையும் முன்கூட்டியே எடுத்துக் காட்டினார். அப்போதே படம் பார்த்த மாதிரி உணர்வு வந்தது. கென் ஸ்கிரீன் பிரெஸன்ஸும், சிரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக மாறுவார் என்பது உறுதி. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் மிகப் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார். அவரும் தமிழில் பெரிய தயாரிப்பாளராக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சார் இசை மிகவும் அருமையாக உள்ளது. அவருடைய இசைக்கு நான் பெரிய ரசிகன். இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் தனுஷ் சார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் சார் ஆகியோருக்கும் நன்றி. வெற்றிமாறன் சார் இயக்கிய படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். அவருடன் ஒரு நாள் வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை” என்று பேசினார் சுராஜ் வெஞ்சுரமூடு.
























