2026 யூலை 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் நடத்தவுள்ள பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவிற்கு நியூ செர்சி மாகாணம் எடிசன் நகரில் உள்ள “நியூ செர்சி மாநாட்டு மையத்தில்”
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து, 2026 ,யூலை 2, 3, 4 ஆகிய நாள்களில் நடத்தவிருக்கும் பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவிற்கு நியூ செர்சி மாகாணம் எடிசன் நகரில் உள்ள “நியூ செர்சி மாநாடு மற்றும் கண்காட்சி மையம்” முடிவு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த அழகிய பிரமாண்ட விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
வாருங்கள்…
தமிழரின் முழக்கம் … விண்ணை எட்டட்டும்!
Venue : New Jersey Convention and Exposition Center, Edison, NJ
Date : July 2, 3 & 4 – 2026
https://fetna-convention.org
பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழா – பதிவுகள் ஆரம்பம்
பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவிற்கான பதிவுகள் முழு வீச்சில் தொடங்கிவிட்டன.
முன்பதிவிற்கான சிறப்பு தள்ளுபடி : 10%
(பொது அனுமதி சீட்டு/Regular Ticket)
இறுதி நாள் : ஏப்ரல் 15,2026
இன்றே பதிவு செய்வீர் !
வருகையை உறுதி செய்வீர்!
ஓரிடத்தில் உங்களுக்கான அனைத்தும்!
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான போட்டிகள், இலக்கிய அமர்வுகள், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், இணை அமர்வுகள், தொழில்முனைவோர் மாநாடு, திரைப்பட விழா, நாடகம் இன்னும் பல உள்ளன…தவறவிடாதீர்கள்!
https://fetna-convention.org
பேரவையின் 39-ஆவது திருவிழா –
பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு
கோவை மாநகரில் சீரும் சிறப்புமாக நடைபெற்று, உலகத் தமிழ் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) பன்னாட்டுத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு (FiTEN) அதன் தொடர்ச்சியாக நியூசெர்சியில், நியூசெர்சி தமிழ்ப் பேரவையோடு இணைந்து நடத்தும் பேரவையின் 39 ஆவது விழாவின் முதல் நாளை புதுப்பொலிவுடன், புத்துணர்ச்சியுடன் அலங்கரிக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வட அமெரிக்கா மட்டுமல்ல; உலகெங்கும் உள்ள தொழில் முனைவோர்களையும், முதலீட்டாளர்களையும், புத்தாக்க ஆர்வலர்களையும், கனவுகளைச் சுமந்து வரும் ஆற்றல்மிகு இளம்தலைமுறைகளையும் ஒன்றிணைக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
நிகழ்ச்சி விவரங்கள்:
????இடம்: நியூசெர்சி மாநாடு மற்றும் கண்காட்சி மையம், எடிசன், நியூசெர்சி
நாள்: வியாழக்கிழமை சூலை 2, 2026
⏰நேரம்: காலை 8:00 மணி முதல் (அமெரிக்க கிழக்கு நேரம்)
இன்றே பதிவு செய்வீர் :
@http://fiten.org/
மாநாட்டிற்கான மேலும் பல தகவல்கள் உங்களுக்காக விரைவில்!
தொழில் முனைவோம்!
தொடர்ந்து வளர்வோம்!
“இராசேந்திர சோழன்”- தெருக்கூத்து
“இராசேந்திர சோழன்” தெருக்கூத்து!
கடாரம் கொண்ட மாமன்னன் முதலாம் இராசேந்திர சோழனின் புகழை, வீர வரலாற்றை தமிழ் மண்ணின் தொன்மையான கலை வடிவில் ஒன்றான தெருக்கூத்தில் மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு மாபெரும் முயற்சி!
கலையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?
தெருக்கூத்து கலையை முறையாகக் கற்கவும், மேடையில் அரங்கேற்றவும் விருப்பம் உள்ளவரா நீங்கள்?
தெருக்கூத்தில் பயிற்சி பெற்று நிகழ்ச்சியில் பங்கேற்க இன்றே பதிவு செய்யுங்கள்.
https://fetna-convention.org/therukkoothu/
அனுபவம் வாய்ந்த திரைப்பட இயக்குநர் திரு.சங்ககிரி ராஜ்குமார் அவர்களிடம் இருந்து நேரடிப் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் முடிவில் பேரவை விழாவில் நடைபெறும் பிரம்மாண்டமான “இராசேந்திர சோழன்” தெருக்கூத்தில் நடிக்கும் இனிய வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.
தமிழர் கலை!
தமிழர் வீரம்!
https://fetna-convention.org
பேரவையின் 39-ஆவது திருவிழா –
விளையாட்டுப் போட்டிகள்
FiST 2026: பேரவையின் மாபெரும் விளையாட்டுத் திருவிழா!
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து சூலைத் திங்கள் 2,3,4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நடத்தவிருக்கும் பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழா தமிழுள்ளங்களைத் தமிழால் இணைக்க காத்திருக்கிறது.
“நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்” என்பது நாம் அறிந்ததே.
வட அமெரிக்கத் தமிழ்ச் சமூகத்தின் உடலும், மனமும் நலமோடு இருக்கவும், அவர்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தவும், வட அமெரிக்கத் தமிழ் உறவுகளுடன் இணைந்து பெருமை கொள்ளவும் பேரவை விளையாட்டு திருவிழா (FiST 2026), ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் களமிறங்குகிறது.
இதில் பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
விளையாட்டுப் போட்டிகள்:
மட்டைப்பந்து (Cricket)
கைப்பந்து (Volleyball)
கபடி (Kabaddi)
மகளிர் எறிபந்து (Women’s Throwball)
பூப்பந்து (Badminton): ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகள்.
பிக்கிள்பால் (Pickleball): ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகள்.
சதுரங்கம் (Chess): தனிநபர் போட்டி.
பேரோட்டம் (Marathon): 5K / 10K / அரை மாரத்தான் பிரிவுகள்.
பெருநடை (Walkathon): சமூக ஒற்றுமைக்கான பொது நடைப்பயணம்
அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள போட்டிகளின் மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
பதிவு செய்ய : fetna.org/fist2026
பேரவையின் 39-ஆவது திருவிழா –
வாகைசூடி போட்டிகள்
வட அமெரிக்க வாகைசூடி போட்டிகள்!
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து சூலைத் திங்கள் 2,3,4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நடத்தவிருக்கும் பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவின் “வட அமெரிக்க வாகைசூடி” போட்டிகளில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
குழந்தைகள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும் நாடளாவிய இப்போட்டிகளில் பங்குபெற உடனே பதிவு செய்வீர்.
துவக்கநிலை போட்டிகள் (காலிறுதி & அரையிறுதி) இணையத்தின் வழியாகவும், இறுதி போட்டிகள் சூலை 2, 3, 4 ஆகிய நாள்களில் நியூசெர்சியில் நடக்கவிருக்கும் பேரவை விழாவிலும் இடம்பெறவிருக்கின்றன.
உங்கள் குழந்தைகளின்/உங்களின் தனித்துவமான திறமைகளை மாபெரும் மேடையில் அரங்கேற்ற இது ஓர் அரிய வாய்ப்பு.
தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்!
போட்டிகளுக்கான முழு விவரங்கள்:
https://fetna.org/contests2026
பதிவு செய்ய கடைசி நாள் : மார்ச் 31,2026
அருவி -இளவேனில் மலர்
நம் பேரவையின் காலாண்டு இதழான இளவேனில் மலரில் பிரசுரிப்பதற்கான தங்கள் படைப்புகளையும், தமிழ்ச் சங்கங்கள் தாங்கள் முன்னெடுத்த நிகழ்வு விவரங்களையும் விளம்பரத் தட்டியில் உள்ள QR செயலியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்யவும்.
Are you a FeTNA Tamil Sangam Member?
அமெரிக்க மற்றும் கனடாவில் வாழும் தமிழ்க் குடும்பங்கள், தங்கள் தமிழ் இளையோரின் திருமண இணைவிற்கு உதவிட, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முன்னெடுப்பு
Register for FREE
























