(கனகராசா சரவணன்)
சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆணையாளர் அக்கினஸ் அம்மையார் 18 ம் திகதி முள்ளிவாய்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ளவதற்காக இலங்கைக்கு வருகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகர் சுமைதாங்கி சந்தியில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொலிசாரின் அராஜகத்தின் மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சிவழங்கும் செயற்பாட்டில் கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் நஞ்சை கொடுக்கவில்லை கஞ்சி கொடுக்கின்றோம் அதனை மக்கள் அருந்துவதற்கு உடன்பாடாக இருந்தார்கள் ஆனால் மக்களை விடாது பொலிசார் இரு வீதியருகில் நின்று கொண்டு தடுத்துக் கொண்டிருந்தனர்
சம உரிமை மத உரிமை, வழிபாட்டு உரிமை இறந்த அல்லது கொல்லப்பட்ட ஆத்மாக்களை நினைவு கூறும் உரிமை சகலருக்கும் இருக்கின்றது இதனை தடுக்க எவருக்கும் உரிமையில்லை சர்வதேச மன்னிப்புச் சபையின் அக்கினஸ் அம்மையார் 18 ம் திகதி முள்ளிவாய்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ளவதற்காக இலங்கைக்கு வருகின்றார்.
எந்தவொரு அடிப்படையிலும் கொள்ளப்பட்டவர்களின் ஆத்மாக்களுக்கு சாந்திவேண்டி செய்யப்படுகின்ற அஞ்சலிக்கு அல்லது கஞ்சி வழங்கும் செயற்பாட்டில் தடைவிதிக்க கூடாது தானும் கூட கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்கின்ற போது இங்கு அடக்குமுறை ஒடுக்குமுறை அராஜகம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது இன்று பாதையின் ஓரமாக மட்டக்களப்பு மண்ணில் எங்களது ஆலையத்துக்கு முன்பாக எங்களுடைய ஆத்மாக்களின் சாந்திவேண்டி நாங்கள் அஞ்சலி செய்வதற்கு உரிமை மறுக்கப்படுகின்றது என்றால் இந்த நாட்டில் மனித உரிமை என்பது தலைகீழக பேனப்படுகின்றது.
இந்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மனித உரிமை ஆணையாளர். சுகாதார பணிப்பாளர், உட்பட சம்மந்தபட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டோம் இல்hலாது விட்டால் அராஜகமான நிலையில் கஞ்சி காச்சுவதை குழப்பி அடிக்கும் நிலையில் பொலிசார் இருந்தனர்.
இந்த நாட்டில் குற்றவாளிகள் தானாக உருவாகவில்லை அவர்கள் குற்றவாளிகளை உருவாக்கப்படுகின்றனர் அமைதியாக செயற்படுகின்ற மக்களை வன்முறைக்கு தூண்டி தண்டிப்பதற்கு விளைந்து கொண்டிருக்கின்றனர் இத்தனை அழிவு நடந்து 144 ஆயிரம் மக்கள் காணமல் ஆக்கப்பட்டும் கூட பொலிசார் இன்னும் திருந்த வில்லை இதனால்தான் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என கேட்டிருந்தோம்.
ஏன் என்றால் இங்கிருக்கின்றவர்கள் இந்த மக்களின் உணர்வுகளை விளங்கிகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். சுயாட்சி, சுயநிர்ணய உரிமை பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என பேசுவது இந்த அடக்கு முறையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட்டு சுதந்திரமாக வாழ்வதற்காகத்தான்
இந்த நாடு குற்றத்துக்கு மேல் குற்றம் செய்தாலும் திருந்த கூடடிய நாடாக இல்லை ஆகவே இந்த நாட்டின் பொருளாதாரம் மனித உரிமை என்பது மிகவும் கேவலமான முறையில் மீறப்பட்டுள்ளது
திருகோணமலை சம்பூரில் கஞ்சி காச்சிய செயல்பாட்டில் ஈடுபட்ட பல்கலைகழக மாணவிகள் உட்பட பெண்களை இரவு நேரத்தில் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்னர் இது ஒரு முறையற்ற காட்டுமிராண்டித்தனமான செயலை எங்களுக்கு உதாரணமாக சொல்லி மிரட்டுகின்றனர் இனரீதியான பாகுபாடுகாட்டிச் செய்கின்றனர். என்றார்.