நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘கல்கி 2898 ஏ.டி’ படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் கல்கி 2898 ஏ.டி படத்தில் சிறப்பு கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாகவும் தற்போது அதற்கு பின்னணி குரல் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, இப்படத்தில் புஜ்ஜி என்ற கதாபாத்திரத்திற்கு கீர்த்தி சுரேஷ் பின்னணி பேசுவதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.