கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் “அமரன்.” இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவுக்கு விருந்தளித்தார். அமரன் படத்தில் சிவகார்த்தியேகன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், சிவகார்த்தியேகன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் “முகந்தன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது.