இலங்கைப் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கொண்டுவரப்படட 20ஆவது திருத்த சட்ட மூலம் மூன்றில் இரண்டு வாக்குள் சாதகமாக அளிக்கப்பட்டதால், சபையில் நிறைவேறியது.
உலகெங்கும் உள்ள மக்களாலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் உட்பட 8 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிகளும் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும் இவ்வாறு ஆதரவாக வாக்களித்தார்கள்.2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புகளின்போது, ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் உறுப்பினர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகளான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹாபிஸ் நஸிர் அஹமட், எச்.எம்.எம். ஹரீஸ், எம்.எஸ். தௌபீக், பைசல் காசிம், தமிழ் முற்போக்கு முன்னணி உறுப்பினர் அரவிந்த் குமார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இஷாக் ரஹ்மான், தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு எம்.பி. அலி சப்ரி ரஹீம் ஆகிய 8 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
இதேவேளை 20ஆவது திருத்தத்தின் 17ஆவது சரத்தான இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் குறித்த 8 பேருடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பி. எஸ்.எம்.எம். முஷாரபும் வாக்களித்திருந்தார்.
வாக்கெடுப்பிற்கு முன்னதாக எதிரணியில் உள்ள சில மு.கா எம்.பிகளை சுற்றி ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகள் காவல் இருந்ததோடு இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.ஹாபிஸ் நஸீர் அஹமட்,அரவிந்த குமார் ஆகியோரை சுற்றியே எதிரணி எம்.பிகள் இருந்ததோடு வாக்கெடுப்பு முடிந்த நிலையில் சில ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிகள் ,ஆதரித்த மு.கா எம்.பிகளை விமர்சித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூன்றில் இரண்டு (3/2) பெரும்பான்மை வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் (2ஆம் வாசிப்பிலும், 3ஆம் வாசிப்பிலும்) வழங்கப்பட்டன.
ஆளும்கட்சி பொதுஜன பெரமுனவுடன் அதன் ஆதரவு கட்சிகளான ஈபிடிபி, தேசிய காங்கிரஸ், சுதந்திரக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
எதிரணியைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் உட்பட 8 பேர் ஆதரவாக வாக்களித்தார்கள்.
20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு என்பன வாக்களித்திருந்தன.
வாக்கெடுப்பின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய, கடந்த இருதினங்களாக காலை 10.00 மணி முதல் இரவு 7.30 மணிவரை இடம்பெற்ற 20 ஆவது திருத்த சட்டமூலம் மீதான விவாதம், நீதி அமைச்சர் அலி சப்ரி ஆரம்பித்து வைத்தார்.
எதிரணி சார்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எம்.பி விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றினார்.
இரவு 7.30 மணிக்கு விவாதம் நிறைவடைந்த நிலையில் குழுநிலையில் திருத்தங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன.
இதன்போது ஆளும் தரப்பு சார்பில் சுமார் 50 திருத்தங்களும் எதிரணி சார்பில் சுமார் 57 திருத்தங்களும் முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுத்தலைவர் அநுர குமார திஸாநாயக்க இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை கோரியிருந்தார்.
அதற்கமைய 2/3 பெரும்பான்மை வாக்குகளால் 20ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
Post Views: 91