முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 21வது திரைப்படம் அமரன். இதனை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்கின்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தின் தற்போது இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு இம்மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றதாம். இந்நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் நடிகர் சஞ்சய் தத் கலந்துகொண்டு நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசியாக தமிழில் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.