தமிழ் தேசிய பணி சபை தலைவர், நல்லையா குமரகுருபரன் .
தனி தமிழ் வேட்பாளர்,தேர்தல் பகிஷ்கரிப்பு என்பன எதிர் கால பேரம்பேசும் வல்லமையை இழக்கச்செய்யும்.
அதனை விடவும் தமிழ் மக்கள் பெரும் பான்மையாக வாக்களிக்கதவறினால் நம்மவர் கடந்த கால வரலாறுபோல் சிறு தொகையே வாக்களிப்பார்களாயின் எமது தமிழ்மக்களாணை கோரும் சுயநிர்ணய உரிமையை, அபிலாசைகளை, தமிழ்மக்கள் பெரும்பான்மையால் நிராகரித்ததாக உலகிற்கு அடித்து கூறுவர். சுயநிர்ணய உரிமையும் கனடாவின் கியூபேக் ஆக போய்விடும்.
பேரம்பேசும் வல்லமையுள்ள, சிங்கள தலைமைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள் இன்னமும் எம்மிடையே உள்ளனர். இவர்களால் முதலில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து தேசிய வேட்பாளர்களை வலிந்திளுத்து தீர்வு பற்றிய அவர்தம் உத்தரவாதம் பெற வேண்டும்.தேர்தலின் பின்னர் தவறின் உலகறியச் செய்வது தனி தமிழ் வேட்பாளர்,தேர்தல் பகிஷ்கரிப்ப என்பதை விட சிறந்த சாணக்கியமாகும் எனவும் முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் என். குமரகுருபரன் தெரிவித்தார்
நாம் விரும்பியோ விரும்பாமலோ தேசியகட்சிகளூடாக ஒரு ஜனாதிபதி தெரிவாகப் போகின்றார் ஆதலின் எமது தனி தமிழ் வேட்பாளரை அவர்கள் பெரிது படுத்த வேண்டிய தேவை இல்லை. தேர்தலை பகிஸ்பரிப்பதன் மூலம் நமக்கான உரிமையை நாமே இழக்க தயாரானவர்களாகின்றோம்.
மாறாக. நாம் நம்மையிழந்த, நம்வளங்களையிழந்த போரினால் அனைத்துலகமும் எமது அபிலாசைகளை அறியும்.பொதுத்தேர்தலிகளில் தமிழர் விடுதலை கூட்டணியின் ஏகோபித்த வெற்றிமூலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிமூலமும் எமது சுய நிர்ணய உரிமையை உலகறிய செய்துவிட்டோம். நாமும் நம் வல்லமையுள்ள மக்கள் பிரதிநிதிகள் இதற்காக ஒன்றுபட்டு தேசிய வேட்பாளர்களுடன் பேச்சு வார்த்தையை ஆரம்பியுங்கள்.வல்லவர்களாக சுமந்திரன், விக்னேஷ்வரன் சித்தார்த்தன் ,செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் இதனை முன்னெடுக்க வல்லவர்களே. பழமைபோல் பழக்கப்பட்ட செத்த பாம்பை மீண்டும் மீண்டும் அடிக்கும் செயல்களை செய்து காலம் கடத்துவது வீணான செயல் எனவும் முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் என். குமரகுருபரன் தெரிவித்தார்