சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து அரண்மனை படத்தின் 2-ஆம் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தொடர்ந்து அரண்மனை 3 வெளியானது. இத்திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில், அரண்மனை 4 திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.
![சுந்தர் சி அரண்மனை 4 படம் ஓடிடியில் வெளியானது](https://uthayannews.ca/wp-content/uploads/2024/04/Aranmanai-4-release-date-postponed-sundarc.jpg)