ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த. – எம்.எல்.ஏ. ரேவண்ணா 66. இவரது மூத்த மகன் சூரஜ், 36. ம.ஜ.த.,- எம்.எல்.சி. ஆக உள்ளார். வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ம.ஜ.த. – எம்.எல்.சி. சூரஜ் ரேவண்ணா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவாகி உள்ளது. இந்நிலையில் பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சூரஜ் கூறுகையில், ”எனக்கு எதிராக அரசியல் சதி நடக்கிறது. விசாரணையில் உண்மை வெளிவரும். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. யார் மீதும் நான் குற்றச்சாட்டு கூற மாட்டேன்,” என்றார்.
![ரேவண்ணாவின் சகோதரர் சூரஜ் கைது](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Revena-brother-surej-arest.jpg)