கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இன்று ( 24)அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்துள்ளார்.
இந்த நோயாளி 56 வயதைக் கொண்ட பெண் ஆவார். அத்தோடு குளியாப்பிட்டி ஊரலிய கித்தலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுள்ளதுடன் நோய் நிலைமை அதிகரித்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.
இது இலங்கையில் பதிவான 15ஆவது கொவிட் நோயாளியின் மரணமாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.