அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றுவரும் 2024 ஆம் ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரானது பல சுவாரஸ்களை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இந்தப் போட்டியில் முதற் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து எட்டு அணிகளைக் கொண்ட சுற்று கடந்த வாரம் இடம்பெற்றது. அதில் முதற்சுற்றுப் போட்டியுடன் முக்கிய நாடுகளான இலங்கை, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் கத்துக்குட்டி அணிகளினால் தோற்கடிக்கப்பட்டு வெளியேறி இருந்தன.
இதில் அமெரிக்க அணியில் பெரும்பாலும் விளையாடும் வீரர்கள் இந்தியா நாட்டில் பிறந்து சந்தர்ப்பம் கிடைக்காமையினால் அமெரிக்காவில் குடியேறி தற்போது அந்நாட்டுக்காக விளையாடும் வீரர்களான காணப்படுவதால் அந்த அணியும் பலம் வாய்ந்த அணியாக காணப்பட்டது. அத்துடன் ஐ.பி.எல். போட்டிகளில் மூலம் சில சிறிய நாட்டு வீரர்கள் தமது திறமையை வளர்த்துக் கொண்டமையாலும் பல முன்னணி அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டன.
இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய எட்டு அணிகளில் இந்தியா, அவுஸ்திரேலியா, பங்களாதே~;, ஆப்கானிஸ்தான் இவை ஒரு குழுவாகவும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா என்பன இரண்டாபது குழுவாகவும் போட்டியிட்டன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் ஏனைய அணிகளுடன் போட்டியிட்டு அதில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி அரையிறுதிக்கு தெரிவு செய்யப்படும்.. அந்தவகையில் முதலாவது குழுவிலிருந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இங்கு ஆப்கானிஸ்தான் அணியானது சம்பியன் அணியான அவுஸ்திரேலியாவையும் எதிர்பார்க்கப்பட்ட பங்களாதேi~யும் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளதுடன் இரண்டாவது குழுவிலி தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகள் அரைறிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதில் இந்திய அணியானது நாளை இங்கிலாந்தினை எதிர்கொள்ள உள்ளதுடன் தென்னாபிரிக்கா அணியானது ஆப்கானி~;தானை நாளை மறுதினம் எதிர்கொள்ளவுள்ளது.
பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஆப்கானிஸ்தான் அணியானது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறுமா அல்லது தென்னாபிரிக்கா அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து முதற்தடவையாக அரையிறுதிக்கு நுழைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமான என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.